பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

காத்தான்குடியில் மீண்டும் வன்முறை நேற்று 25 பேருக்கு வெட்டுக் காயங்கள் உடன் ஊரடங்கு அமுலுக்கு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 05 June 2008

காத்தான்குடிப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாகப் பதற்றத்துடன் நீடித்த ஹர்த்தால் நடவடிக்கைகள் முடிவுக்கு வந்து நேற்றுக் காலை வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டபோதிலும் ஓரிரு மணித்தியாலங்களில் நேற்று முற்பகலே அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது. தமிழர்கள், முஸ்லிம்கள் என மொத்தம் 24 பேர் கத்திவெட்டுக்காயங்களுக்கும், கல்வீச்சுக் காயங்களுக்கும் உள்ளானார்கள்.
நிலைமை மோசமடைந்ததை அடுத்து அப்பிரதேசத்தில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது.

தமிழ்ப் பிரதேசமான ஆரையம்பதிக்கு வர்த்தக நடவடிக்கைக்காகச் சென்ற முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் அங்கு கத்திக்குத்திற்கு இலக்கானார் என்று பரவிய தகவலைத் தொடர்ந்தே காத்தான்குடிப் பகுதியில் மீண்டும் வன்முறைகள் வெடித்தன.
மட்டக்களப்பு கல்முனை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த தமிழர்கள் மீது கற்களையும் தடிகளையும் பயன்படுத்திக் கும்பல் ஒன்று தாக்குதல்களை மேற்கொண்டது.
இதில் மூன்று பெண்கள் உட்பட 16 தமிழர்கள் காயமடைந்தனர். இவர்களில் நால்வர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் ஆரையம்பதி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.
தாக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்ட முஸ்லிம் வர்த்தகரை வீதியில் நிறுத்தி அவர் காயமடையவில்லை என்பதையும் அதிரடிப்படையினர் காண்பித்துள்ளனர்.
ஆரையம்பதிக்கு வர்த்தக நடவடிக்கைகளுக்காகச் சென்ற இந்த முஸ்லிம் வர்த்தகர் அங்கு அச்சுறுத்தப்பட்டுள்ளார். அவரது உடைகள் கிழிக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்தே அவர் கத்தியால் குத்தப்பட்டார் என்ற வதந்தி பரவியுள்ளது எனக் கூறப்பட்டது.
இதேவேளை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து மட்டக்களப்பு மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்த அம்புலன்ஸ் மீதும் இனந்தெரியாதவர்கள் முற்பகல் 11 மணியளவில் மேற்கொண்ட தாக்குதலில் 6 நோயாளிகளும் 3 மருத்துவப் பணியாளர்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த 6 பேரும் முஸ்லிம்கள் எனவும் முஸ்லிம் குழுவொன்றே அம்புலன்ஸ் மீது கற்களை வீசித் தாக்கியதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மட்டக்களப்பு மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை மேற்கொண்டனர். மருத்துவப் பணியாளர்களுக்கும் அம்புலன்ஸ்களுக்கும் உரிய பாதுகாப்பை அதிகரிக்குமாறு அவர்கள் கோரினர்.
நேற்றுத் திடீரென மூண்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு நகரிலும் காத்தான்குடிப் பகுதியிலும் உள்ள பாடசாலைகள் அவசர அவசரமாக மூடப்பட்டன. நகரம் வெறிச்சோடியது பாதுகாப்புப் படையினர் மேலதிகமாகக் குவிக்கப்பட்டனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காத்தான்குடியில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கதவடைப்பு முடிவிற்கு வந்து இயல்பு நிலை திரும்பிய ஓரிரு மணித்தியாலங்களில் வன்முறைகள் திரும்பவும் மூண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த வன்முறைகளில் வாகனம் ஒன்று எரியூட்டப்பட்டதாகவும், சில கடைகளின் பொருட்கள் சூறையாடப்பட்டு வீதியில் போட்டு எரிக்கப்பட்டன என்றும் கூறப்பட்டது.
இதேவேளை, நேற்றைய சம்பவங்களில் படுகாயமடைந்து மட்டக்களப்புப் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவர் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்புக்கு மாற்றப்பட்டார் என வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் கே.முருகானந்தம் தெரிவித்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..