|
காத்தான்குடி பள்ளிவாயலுக்குள் புகுந்து தாக்கிய பிள்ளையான் குழுவினர்! |
|
|
|
Thursday, 05 June 2008 |
|
இன்று காலை 8.30 மணியளவில் காத்தான்குடியிலுள்ள பள்ளிவாயல் ஒன்றுக்குள் உட்புகுந்த 15 தொடக்கம் 20 பேர் வரையான பிள்ளையான் குழு உறுப்பினர்கள் அங்கிருந்தவர்களை கூரிய ஆயுதங்களுடன் தாக்கி காயப்படுத்தியதாகவும் பள்ளிவாயலிலிருற்த பொருட்களை அடித்து சேதமாக்கியதாகவும் இதனைத் தொடர்ந்து முஸ்லிம் மக்கள் கடைகளைப் பூட்டிவிட்டு அப்பகுதிகளில் சிதறி ஓடியதாகவும் காத்தான்குடி தகவல்கள் தெரிவிக்கின்றன. 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில இந்தப் பள்ளிவாயலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீதான படுகொலைச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மீனகன்
|