|
மொறட்டுவ குண்டுத்தாக்குதல் எதிரொலி: பிரித்தானியா பயண எச்சரிக்கை |
|
|
|
Saturday, 07 June 2008 |
|
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து பிரித்தானியா அரசாங்கம் தனது குடிமக்களுக்கு பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளுக்கான பயணங்களை பிரித்தானியா குடிமக்கள் தவிர்ப்பதுடன், இராணுவ முகாம்கள், அரச அலுவலகங்கள், துணை இராணுவக் குழுக்களின் அலுவலகங்களுக்கு அருகாமை ஊடாக செல்வதனையும் தவிர்த்தல் வேண்டும்.
தற்போதைய தாக்குதல்களில் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பொதுமக்களின் போக்குவரத்துக்களும் தாக்குதலில் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
இந்த வருடம் நடைபெற்ற தாக்குதல்களில் 100-க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே வெளிநாட்டு குடிமக்களும் பாதிப்படையும் சாத்தியங்களும் அதிகரித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|