|
சிறிலங்காவின் தென்பகுதியில் இடம்பெற்று வரும் தொடர் குண்டுவெடிப்புக்களைத் தொடர்ந்து கொழும்பு பங்குச்சந்தை சரிவைச் சந்தித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
இந்த வாரத்தின் இறுதி நாளான நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பங்குசந்தை சரிவை சந்தித்துள்ளது.
கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் குண்டு வெடிப்புக்களைத் தொடர்ந்து இச்சரிவு ஏற்பட்டுள்ளதாக பங்குசந்தை முகவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் தாக்கம் எதிர்வரும் வாரமும் எதிரொலிக்கலாம் என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக பங்குசந்தையின் வர்த்தகம் மந்த நிலையை அடைந்திருந்தது.
சிறிலங்காவின் பங்குச்சந்தை நேற்று மாலை 16.87 புள்ளிகளால் குறைவடைந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக சிறிலங்காவின் தென்பகுதியில் மோசமடைந்து வரும் பதற்றமான சூழ்நிலை காரணமாக அந்நாட்டில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டிவருவதே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|