பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

படைத் தரப்பில் பெரும் உயிரிழப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 08 June 2008

மன்னார் வவுனியா மாவட்டங்களில் சிறிலங்காப் படைத்தரப்பு மேற்கொண்ட பல பாரிய படை நகர்வுகளை விடுதலைப்புலிகள் உக்கிர எதிர்த்தாக்குதல் மூலம் முறியடித்தனர். களமுனைகளில் ஏற்பட்ட

பெரும் உயிரிழப்புக்களை அடுத்துப் படைத்தரப்பினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடினர்.

இதில் மன்னாரில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட இரண்டு பெருமெடுப்பிலான முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டு படையினருக்குப் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மூர்க்கத்தனமாக முன்நர்ந்த படையினர் பலத்த எதிர்தாக்குதல்களால் தமது நிலைகளிற்குத் தப்பியோடினர்.

முதலாவது முன்நகர்வு நடவடிக்கையை நேற்றுக் காலை 10.30 மணிக்குச் சிறிலங்காப் படையினர் ஆரம்பித்தனர். பெரியமடுக்குளத்தின் வலதுகரையை நோக்கிய இந்தப் படைநடவடிக்கைக்கு படைப் பின்தளங்களில் இருந்து மிகப்பலமான ஆட்லெறி, மோட்டர்களின் செறிவான சூட்டாதரவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் ஆதரவுடன் கனரகப் போர்த்தளபாடங்களின் பலப்பிரயோகத்துடனும் படையினர் முன்நகர்ந்தனர்.

இந்த நிலையில் முன்நகரும் படையினருக்கும் விடுதலைப்புலிகளின் முறியடிப்பு அணிகளுக்கும் இடையில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றன. இதன் போது படையினருக்குப் பெரும் உயிரிழப்புக்கள் ஏற்பட்டன. மாலை 3.00 மணியளவில் படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

இந்த முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுக் கொண்டிருந்த சமநேரத்தில் பிற்பகல் 2.00 மணிக்கு பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கி மற்றொரு முன்நகர்வைப் படையினர் மேற்கொண்டனர்.
ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் முன்நகர்ந்த படையினர் விடுதலைப்பலிகளின் முறியடிப்பு அணிகளின் தாக்குதல்களில் பெரும் இழப்புக்களைச் சந்தித்தனர். விடுதலைப்புலிகளின் தாக்குதல்களிற்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.

விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்ட இந்த இரு படை நடவடிக்கைகளிலும் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பெருமளவான படையினரை ஏற்றியிறக்கும் நடவடிக்கைகளில் சிறிலங்காப் படையினரின் உலங்கு வானூர்திகள் தொடர்ச்சியாக ஈடுப்பட்ட வண்ணம் இருந்ததாக களமுனைத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை, வவுனியா குஞ்சுக்குளத்தில் சிறிலங்காப்படையினர் மேற்கொண்ட மும்முனை முன்நகர்வு முயற்சிகளும் விடுதலைப்புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதுடன் ஏழுக்கும் அதிகப்படையினர் காயமடைந்துள்ளனர்.

நேற்றுப் பகல் 12.30 மணிக்கு ஆட்லெறி, மோட்டார்களின் செறிவான சூட்டாதரவுடன் குஞ்சுக்குளம் முன்னரணை இலக்குவைத்துப் படையினர் மூன்று முனைகளில் முன்நகர்வை மேற்கொண்டனர். இதற்கு எதிராக விடுதலைப்புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். சிறிலங்காப் படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 5.25 மணிவரைக்கும் குறித்த பகுதிகளில் கடுமையான சண்டைகள் இடம்பெற்றன.

இச்சண்டைகளின் போது நான்கிற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டும் ஏழிற்கும் அதிக படையினர் காயமடைந்துமுள்ளனர். இதனை அடுத்து படையினர் தமது நிலைகளிற்குப் பின்வாங்கிச் சென்றுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..