|
மன்னார் கடற்கரையோரத்தில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடம் ஆரம்பம். |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
மன்னார்க் கரையோரப் பிரதேசங்களில் எண்ணெய் அகழ்வுப் பணிகள் அடுத்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்துள்ளார்
இதன் முதற் கட்டப் பணிகளுக்காக முதலாம் இலக்கக் கரையோரத்திற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கியுள்ளது.
இதன்படி இந்தியாவின் வரையறுக்கப்பட்ட காரின்ஸ் நிறுவனத்தை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் இலங்கை அரசாங்கத்துடன் உடன்படிக்கையைச் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுமார் மூவாயிரம் சதுர கிலோமீற்றர் எண்ணெய் ஆய்வுக்காக இந்திய நிறுவனம் 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாகவும் அமைச்சர் ஏ எச் எம் பௌஸி தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|