|
வடக்கில் இருந்து கொழும்புக்கு வருவோருக்கு பாஸ் நடைமுறை |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
வடக்கில் இருந்து பொதுமக்கள் தென்பகுதிக்கு வரும்போது காவல்துறை பாஸ் அனுமதியைப் பெற வேண்டும் என்ற தீர்மானம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகச் சண்டே டைம்ஸ் செயதித்தாள் தெரிவித்துள்ளது.
இதன்படி வவுனியா மன்னார் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய இடங்களில் இருந்து தென்னிலங்கைக்கு வருவோர் காவல்துறையின் அனுமதியைப் பெறவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலை புலிகளின் தென்னிலங்கை ஊடுருவலைத் தடுப்பதற்கே இந்த நடவடிக்கை கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையின் மலையகப் பிரதேசங்களான கண்டி கட்டுகஸ்தொட்ட ஆகிய இடங்களிலும் மேல் மாகாணத்தில் கம்பஹாவிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருப்பதை அடுத்து அங்கு பாரிய தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெருடல் இணையம்
|