பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மன்னார் பெரியமடு நோக்கிய படையினரின் ஆக்கிரமிப்பு முறியடிப்பு : 20 படையினர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 09 June 2008

மன்னார் பெரியமடுப்பகுதியூடாக சிறீலங்கா படையினர் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் நான்குமுனைகளின் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதிநோக்கி ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கடுமையான எறிகணை மற்றும் ஆட்டிலெறி சூட்டாதரவுடன் பெரியமடு குளகட்டு பகுதியின் இடதுகரையூடாக முன்னகர முற்பட்ட படையினரை கடுமையாக சுமார் 8 மணிநேரத்திற்கு அதிகமாக முன்னகர முடியாமல் விடுதலைப்புலிகள் தாக்குதல்களை தொடுத்திருந்தனர்.
இதேவேளை பெரியமடு குளத்தின் தென்பக்கமாகவும் கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றதாகவும் இதனை தடுத்து நிறுத்தி கடுமையாக தாக்குதல்களை தொடுத்துவருவதாகவும் தெரியவருகிறது.

மற்றுமொரு அணியினர் பாலம்பிட்டியில் இருந்து பெரியமடு நோக்கியும் டாங்கிகள் சகிதம் முன்னகர்வினை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்னமும் இருமுனைகளில் மோதல்கள் இட்பெற்றுவருவதாகவும் படையினர் பொறிவெடிகளிலும் விடுதலைப்புலிகளின் கடுமையான தாக்குதல்களிலும் சிக்கி பாரிய உயிரிழப்பை சந்தித்துள்ளதாகவும் அறியமுடிகிறது.

இதேவேளை காயமடைந்துள்ள படையினரை சிறீலங்கா படையினரின் உலங்கு வானுர்திகளில் இருந்து பலதடவைகள் களமுனையினை விட்டு அகற்றும் முயற்சிகளிலும் படையினர் ஈடுபட்டுவருதாகவும் அறியமுடிகிறது.

இதுவரை இடம்பெற்ற மோதல்களில் 20ற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. சிறீலங்காப் படையினருக்கு ஏற்பட்ட பலத்த இழப்புகள் காரணமாக சிறீலங்காப் படையினர் தாக்குதல் நவடிக்கைகளை இன்று திங்கட்கிழமை நிறுத்தியுள்ளதாக களமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..