|
கடத்தப்பட்ட 10 முஸ்லீம்களும் விடுதலை |
|
|
|
Sunday, 08 June 2008 |
|
பொத்துவில் பிரதேசத்தில் மரம் வெட்டச் சென்ற 10 முஸ்லிம்களை பிள்ளையான் குழுவினர் கடந்த புதன்கிழமை கடத்திச் சென்றதாகத் தெரியவருகிறது.
எனினும், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் தலையீட்டின் காரணமாக குறித்த முஸ்லிம்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
கடந்த வியாழக்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்புடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து குறித்த முஸ்லிம்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|