|
யாழில் முப்படையும் இணைந்து போர்பயிற்சி |
|
|
|
Monday, 09 June 2008 |
|
யாழ் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படையும், தரைப்படை, வான்படையினர்
ஆகிய முப்படைகளும் இணைந்து தமது ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில் பாரிய போர் ஒத்திகையையும் மேற்கொண்டுவருகின்றனர்.
அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலி வலயப் பகுதியிலேயே படையினரின் போர் ஒத்திகை இடம்பெற்று வருவதாகவும் இவை அனைத்தும் மற்றுமொரு பாரி படைநடவடிக்கைக்கு தயாராகிவருவதாக யாழ்ப்பாணச் செய்திகள் தெரிவிக்கின்றன.
பலாலி தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்படையின் உலங்குவானூர்திகள் வடமராட்சி கிழக்கு வடக்கு மற்றும் யாழ் ஏரிப் பகுதிகளுக்கு மேலாக காலை முதல் மாலைவரை முழுநேரக் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை குறிப்பிட்ட கடல் பகுதிகளில் சிறிலங்கா கடற்படையினரின் யுத்தக் கப்பல்கள் ரோந்து நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணம் இடைக்காடு தொண்டமானாறு போன்ற பகுதிகளிலிருந்து ஆட்லெறி மற்றும் மோட்டார் தாக்குதலை நடத்திக்கொண்டிருந்தனர்.
காதைக் கிழிக்கும் இரைச்சலுடனான ஆட்டிலறி மற்றும் இயந்திரத்துப்பாக்கிச் சத்தங்களால் குடாநாடாடே அதிர்ந்துகொண்டிருந்த அதேவேளையில் முப்படையினரும் இணைந்து கடந்த இரண்டு தினங்களாக மேற்கொண்டுவரும் போர் ஒத்திகை நடவடிக்கை காரணமாக குடாநாட்டில் பெரும் பதற்ற நிலைமை கடந்த மூன்று நாட்களாகத் தொடர்கின்றது.
குடாநாட்டிலிருந்து மற்றொரு பாரிய நடவடிக்கையை முன்னெடுப்பதற்கான பயிற்சியாகவே இந்த யுத்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டுவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|