பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்கா கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள்: குரோசிய அரசுடன் புதிய கூட்டு முயற்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 09 June 2008

சிறிலங்கா கடற்படைக்கு போர்க் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் குரோசிய நாட்டுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது.

சிறிலங்காப் பிரதமரின் குரோசியப் பயணத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

பாக்கு நீரிணை பக்கமாகவும் வடக்கு - கிழக்குப் பகுதிகளை அண்டிய ஆழ்கடலிலும் அதிகரித்துள்ள கடற்புலிகளின் நடவடிக்கைகளுக்கு எதிராக தாக்குதல்களை மேற்கொள்வதற்கு சிறிலங்கா கடற்படையிடம் தாக்குதல் படகுகள் பற்றாக்குறை என்பது தொடர்ந்து வரும் பிரச்சினையாகவுள்ளதால், இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டே - இனியும் தாமதியாமல் - சிறிலங்கா இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவித்தன.

சிறிலங்கா கடற்படையின் வலுவையும் வலிமையையும் அதிகரிக்கும் வகையில் மேற்கொள்ளக்கூடிய இந்த திட்டத்துக்கு குரோசிய அரசு சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..