|
கிழக்கில் முஸ்லிம்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என எச்சரிக்கை |
|
|
|
Tuesday, 10 June 2008 |
|
அரசாங்கம் கிழக்கில் பிள்ளையான் குழுவினரிடம் இருந்து முஸ்லிம்களைப் பாதுகாக்கத் தவறினால், முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுவர் என முஸ்லிம் விடுதலை முன்னணி எச்சரித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த கட்சியின் செயலர் எம் பி காதர், கிழக்கில் இன்று ஏற்பட்டுள்ள பதற்றத்திற்கு, அரசாங்கத்தினால் முஸ்லிம் மக்களுக்குத் துரோகம் இழைக்கப்பட்டமையே காரணம் எனக் குற்றஞ் சுமத்தினார்.
கிழக்கில் தேர்தல் சுதந்திரமாக இடம்பெறவில்லை. தேர்தல் காலத்திற் கூட பிள்ளையான் குழுவினர் ஆயுதங்களுடனேயே செயற்பட்டனர் என அவர் குறிப்பிட்டார்.
முஸ்லிம்களுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவதாகக் கூறி, ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியுள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்கள் அமைச்சர்கள் தமது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதிலேயே அக்கறை கொண்டுள்ளதாகவும் காதர் குற்றஞ் சுமத்தினார்.
நெருடல் இணையம்
|