பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையின் இனப்பிரச்சினை இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 12 June 2008

இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இலங்கையிற் பிரச்சினை தீவிரமடையும் போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார். எனவே இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகியுள்ளது என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்தியா அயல்நாடுகளான பாகிஸ்தான்; பங்களாதேஸ்; நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன உறவுகளைப் பேணி வருகிறது. எனினும் இதன் போது தமது தேசியத்துவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்தியா அவதானமாக இருந்து வருவதாக மன்மோகன் சிங் தெரிவித்தார்.

இதேவேளை அயல்நாடுகள் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை இந்தியா விரும்புகிறது. ஏனெனில் குறித்த நாடுகளின் பிரச்சினை இறுதியில் இந்தியாவின் பிரச்சினையாக மாறிவிடுவதாக இந்தியப் பிரதமமந்திரி சுட்டிக்காட்டினார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..