பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் கடற்கரும்புலிகள் உடைப்பர்: கடற்புலிகளின அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 16 June 2008

சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி  விநாயகம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை துறைமுகத்தில் 10.05.2008 அன்று ஏ-520 துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவினைச் சேர்ந்த கடற் கரும்புலி லெப். கேணல் செம்பியவழவன் என்ற மாவீரரின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பரந்தன் பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் விநாயகம் ஆற்றிய உரையில் கூறியதாவது:

திருகோணமலை துறைமுகத்தில் தரித்து நின்ற ஏ-520 துருப்புக்காவி கப்பலை மூழ்கடித்து வீரச்சாவை தழுவிக்கொண்டவர் கங்கைய அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலி லெப். கேணல் செம்பியவழவன்.

கங்கை அமரன் நீரடி நீச்சல் பிரிவு கடற்கரும்புலிகளால் துருப்புக்காவி கப்பல் மூழ்கடிக்கப்பட்டது என்று நாம் கூறியிருந்தோம்.

இன்றும் தமது எத்தனை கப்பல்கள் வெடிக்குமோ என்ற அச்சத்துடன் தான் சிறிலங்கா கடற்படை குழம்பிப் போய் உள்ளது.

இக்கப்பலை உடைத்து எறிந்தது போன்று சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும்  எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள். உடைத்து வீர வரலாற்றை நிலை நாட்டுவார்கள் என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..