|
வவுனியாவில் சிறிலங்கா காவல்துறையினர் மீது குண்டுத் தாக்குதல்: 12 பேர் பலி- 20 பேர் காயம் |
|
|
|
Monday, 16 June 2008 |
|
வவுனியா நகரில் உள்ள சிறிலங்கா காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 12 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்துள்ளனர்.
வவுனியா காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில் இருந்து கடமைகளுக்காக புறப்பட்ட காவல்துறையினரை இலக்கு வைத்து இன்று திங்கட்கிழமை காலை 7:10 மணியளவில் இக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கொல்லப்பட்ட 12 காவல்துறையினரில் 3 பெண் கான்ஸ்டபிள்களும் அடங்குவர் என்று வவுனியா சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது ஒரு தற்கொலைக் குண்டுத்தாக்குதல் என்று வவுனியா காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
காயமடைந்த 20 பேரும் வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நெருடல் இணையம்
|