|
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் கிளிநொச்சி ஆசிரியர்கள் |
|
|
|
Tuesday, 17 June 2008 |
|
கிளிநொச்சி தமிழ் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த இரண்டு பெண் ஆசிரியர்கள் உட்பட நான்கு ஆசிரியர்கள் மருதானை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி தமிழ் மகாவித்தியலாயத்தைச் சேர்ந்த வி.கவிதா, எஸ்.கவிதா, வி.முரளிதரன், கே.இரத்தினபாலன் ஆகிய நான்கு ஆசிரியர்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் கடந்த ஒன்றரை வருடங்களாக மகரகமவில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தங்கியிருந்து கற்கை நெறிகளுக்கு சமூகமளித்து வருபவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் நால்வரும் மகரகமவில் உள்ள ஆசிரிய பயிற்சி கலாசாலையில் தங்கியிருந்து கற்கை நெறிகளுக்கு சமூகமளித்தமைக்கான அனைத்து ஆதாரங்களையும் வழங்கிய போதும் அவற்றை ஏற்க மறுத்த மருதானை காவல்துறையினர் இவர்கள் நால்வரையும் பயங்கரவாத குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களின் கைது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|