பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வடமராட்சி கிழக்கு கடல் தொழிலாளர்கள் மீது தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 16 June 2008

யாழ். வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டு வந்த 33-க்கும் அதிகமான மீன்பிடிப் படகுகள் மீது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கி கலங்கள் நீண்ட தூரம் துரத்திச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளன.

வடமராட்சி கிழக்கு கடல் பரப்பில் தொழிலில் ஈடுபட்டிருந்த தூண்டில் படகுகளையே டோறாப் படகுகள் நேற்று முன்நாள் காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை துரத்தி தாக்குதலை நடத்தியுள்ளன.

அதேநேரம் டோறாப் பீரங்கி கலங்கள் கடலில் தரித்து நிற்க சிறிலங்கா வான்படை வேவு வானூர்தி வட்டமிட நாகர்கோவில் களமுனையில் உள்ள படையினர் கரையை நோக்கி வந்த மீன்பிடிப் படகுகள் மீது சரமாரியான எறிகணைத் தாக்குதலையும் நடத்தியுள்ளனர்.

இதனால் தமது படகுகளை கைவிட்டு விட்டு கடல் தொழிலாளர்கள் பாதுகாப்பு தேடிக்கொண்டனர்.

இத்தாக்குதல்களால் 25-க்கும் அதிகமானவர்கள் தூண்டில் தொழிலை கைவிட்டு கரை சேர்ந்துள்ளனர். இதனால் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 20,000 ரூபாவுக்கும் மேற்பட்ட பொருள் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..