|
களமுனைப் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் சார்பில் உலர் உணவுகள் |
|
|
|
Tuesday, 17 June 2008 |
|
களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவுகளை வழங்கும் செயற்பாடுகள் தாயகத்தில் நாள்தோறும் நடைபெற்று வருகின்ற நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் ஆர்வத்துடன் தற்போது அவற்றினை வழங்கி வருகின்றனர்.
வழமையான பங்களிப்புகளுக்கு அப்பால் களமுனைப் போராளிகளுக்கான உலர் உணவிற்கான உதவிகளை தாங்கள் வாழும் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்கள் ஊடாக அவர்கள் வழங்கி வருகின்றனர்.
ஐரோப்பாவில் வசிக்கும் கோபி, சில நாட்களுக்கு முன்னர் களமுனைப் போராளிகளுக்கு உலர் உணவு வழங்குவதற்கான ஒரு தொகைப்பணத்தை அங்குள்ள செயற்பாட்டாளர்கள் ஊடாக தாயகத்திற்கு அனுப்பியிருக்கின்றார்.
நெருடல் இணையம்
|