|
வடபோர்முனை மோதல்களில் 5 படையினர் பலி: 29 பேர் காயம் |
|
|
|
Thursday, 19 June 2008 |
|
வடபோர்முனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 படையினர் கொல்லப்பட்டும் 29 படையினர் காயமடைந்தள்ளதாகவும் சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி புதன்கிழமை வவுனியா- மன்னார் களமுனைகளில் 3 படையினர் கொல்லப்பட்டும் 15 படையினர் காமடைந்துள்ளதாகவும். முகமாலை களமுனையில் புதன்கிழமை காலை பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும்
பெரியமடு பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிராட்டிக்குளம் பகுதியில் பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும்
மற்றும் மணலாறு களமுனையில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் நான்குபேர் காயமடைந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|