பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பெரும்பாலான தமிழர்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தத் தய அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 18 June 2008

சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த விருப்பம் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச இது தொடர்பாக கருத்தை ஆங்கிலச் செய்தித்தாள் ஒன்றுக்கு வெளியிட்டுள்ளார்.

பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற ரீதியில் இந்தப் பேச்சுவார்த்தையை அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் கடந்த ஜனவரியில் முறிந்துபோன போர்நிறுத்த உடன்படிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துவது தொடர்பான கருத்தை அவர் நிராகரித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாம் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசத்தயார் என குறிப்பிட்டிருந்தமையையும் பசில் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆயுதங்களைக் கீழே வைத்தால் மாத்திரமே தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என ஜனாதிபதி கூறியிருந்தமை தொடர்பில் அவரிடம் கேட்டபோது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது நிபந்தனைகள் செயற்படுத்தப்படவேண்டும் எனப் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் அல்லர். எனினும் பெரும்பாலான தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் என்ற அடிப்படையில் அவர்களுடன் பேசமுடியும். ஜனாதிபதியும் இதனையே முன்னர் வலியுறுத்தியிருந்தார்.

எனினும் துரதிஷ்டவசமாக அவர்கள் செய்கின்ற காரியங்களை ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..