பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இந்தியாவின் பாதுகாப்பு உயர்மட்டக் குழுவொன்று இலங்கைக்கு இரகசிய விஜயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 20 June 2008

இந்தியாவின் உயர்மட்ட பாதுகாப்புக் குழுவொன்று இலங்கைக்கு இரகசிய விஜயம் மேற்கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனன், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.நாரயணன், பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங் ஆகிய இந்தியப் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ,  ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் இருதரப்புப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து கலந்தாலோசிப்பதற்கு  இந்தியா விஜயம் செய்திருந்தனர்.  இந்த விஜயத்தின் ஒர் தொடர்ச்சியாகவே இந்திய உயர்மட்டப் பாதுகாப்புக் குழுவினர் இலங்கை விஜயம் செய்துள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தியப் பாதுகாப்புத்துறை உயர் அதிகாரிகளின் இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொள்ளவுள்ளார்.   இலங்கையில் தற்போது நிலவும் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள உயர்மட்டக் குழுவினர் ஆராயவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..