|
சிறீலங்கா படையினரின் புதியபடையினரில் 15 இளைஞர்கள் மர்மமான முறையில் பலி |
|
|
|
Saturday, 21 June 2008 |
|
கடந்த திங்கட்கிழமை நெடுந்தீவு பகுதியில் புதிதாக படையில் இணைந்த இளைஞர்களில் 15 பேர் மர்மமான முறையில் சூட்டுக்காயங்களுடன் பலியாகியுள்ளனர்.
இவர்கள் 6 முதல் 20 வரையான வயதெல்லை உடையவர்கள் எனவும் இவர்களை இராணுவத்தில் சேர்க்கும்போது தெற்குபகுதியில் வைத்தே பயிற்சி வழங்கப்படும் எனத்தெரிவித்தபோது இவர்களை நெடுநடதீவுக்கு கொண்டு வந்ததையடுத்து இவர்கள் ஆத்திரமும் விசனமும்அடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது.
உறுதிப்படுத்தப்படாத தகவல்களின்படி இவர்கள் சேர்ந்து தற்கொலை செய்துள்ளதாக அறியமுடிகிறது.
துப்பாக்கிச்சூட்டு சம்பவம் திங்கட்கிழமை இரவு நடைபெற்றதாகவும் இவர்களது உடலங்கள் செவ்வாய்கிழமை ஊர்காவற்துறைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சிறீலங்கா படையினர் இது தொடர்பில் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளே இவர்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மேமாதம் இடம்பெற்ற விடுதலைப்புலிகளின் தாக்குதலையடுத்து சிறீலங்கா படையினர் கடுமையான பாதுகாப்பு விதிகளை அமுல்படுத்தி பாதுகாப்பினை பலப்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.
நெருடல் இணையம்
|