|
இலங்கை மீனவர்கள் 28 பேர் இந்தியக் கடற்படையினரால் கைது. இலங்கை அகதிகள் 7 பேர் தமிழகம் சென்றுள்ளனர். |
|
|
|
Saturday, 21 June 2008 |
|
இலங்கை மீனவர்கள் 28 பேர் இந்திய கடற்படையினரால் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்திய கடல் பகுதியில் பிரவேசித்தனர் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் கன்னியாகுமரிக்குக் கிழக்கே 65 கடல் மைல் தொலைவில் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் இன்று தூத்துக்குடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தூத்துக்குடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை மன்னார் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் இருந்து இரண்டு குடும்பங்களின் 7 பேர் நேற்று அகதிகளாகத் தமிழ்நாட்டுக்குச் சென்றுள்ளனர்.
தனுஷ்கோடி அரிச்சல்முனைப் பிரதேசத்திற்கு இவர்கள் நேற்றுக் காலை வந்து சேர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் பின்னர் மண்டபம் முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்
நெருடல் இணையம்
|