|
மாந்தையில் சிறிலங்காப் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் பொதுமகன் படுகொலை |
|
|
|
Sunday, 22 June 2008 |
|
முல்லைத்தீவு மாவட்டத்தின் மேற்குப் பகுதியில் உள்ள பாலைப்பாணியில் சிறிலங்காப் படையின் ஆழ ஊடுருவும் அணி நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் அப்பாவிப் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மாந்தை கிழக்கு பாலைப்பாணியில் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:00 மணியளவில் இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் கொல்லப்பட்டவர் பளை செல்வபுரத்தைச் சேர்ந்தவரும், மல்லாவியில் வசித்து வந்தவருமான பரமசிவம் சிறீகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|