பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத விநியோக முனைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 23 June 2008

இலங்கையுடன் இந்தியா புதிய ஆயுத உடன்பாடுகளைச் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவினதும் பாகிஸ்தானினதும் நட்பை இலங்கை பெற்றுவிடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு இந்த முனைப்பு மேற்கொள்ளப்படுவதாக ஹந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆயுத உடன்படிக்கையானது, “தற்பாதுகாப்பு” என்ற அடிப்படையில் அமைந்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய உயர்குழுவினர், இது தொடர்பான பேச்சுக்களையே இலங்கை அதிகாரிகளுடன் நடத்தியதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் குறி;ப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் தலைமையிலான உயர்குழுவினர் இலங்கைக்கு இராணுவ மற்றும் புலனாய்வு அடிப்படையிலான உதவிகளை வழங்க உறுதியளித்துள்ளதாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, தமிழ்நாட்டின் உணர்வுகளைத் தூண்டாத வண்ணம், தற்பாதுகாப்பு என்ற அடிப்படையில் 40 மில்லிமீற்றர் ரக எல் 70 வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள் மற்றும் குறைந்த மட்டத்தில் பறக்கும் ஊர்திகளைக் கண்காணிக்கும் ரடார் என்பவற்றை இலங்கைக்கு விநியோகம் செய்துள்ளது.

இலங்கை ஏற்கனவே சீனாவிடம் இருந்து 1990 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளுக்குப் பின்னர், ஜியான் - 7 சண்டை வானூர்திகள்,ஜே வை-11 3 டி வான்பரப்பைக் கண்காணிக்கும் ராடர்கள், இயந்திரத் துப்பாக்கிகள்,ஏ கே 47 துப்பாக்கிகள்,வானூர்தி எதிர்ப்புத் துப்பாக்கிகள் என்பவற்றைக் கொள்வனவு செய்திருக்கிறது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..