|
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு: மூன்று காவல்துறையினர் பலி: ஒருவர் காயம் |
|
|
|
Monday, 23 June 2008 |
|
இன்று மாலை ஆயித்தியமலை பகுதியில் சிறீலங்கா காவல்துறையினரது காவல்நிலை பகுதி ஒன்றில் இருந்து 400 மீற்றர் தூரத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் மூன்று காவல்துறையினர் கொல்லப்பட்டு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
மூன்று காவல்துறையினர் அதற்கு அருகாமையில் உள்ள ஏரியில் நிராடுவதற்கு சென்றபோதே இவர்கள் நேரம்குறித்து வெடிக்கவைக்கும் குண்டின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் டி.ஐ.ஜி ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.
நெருடல் இணையம்
|