பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow வவுனியா பாலமோட்டையில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 8 படையினர் பலி- 24 பேர் காயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

வவுனியா பாலமோட்டையில் படையினரின் முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: 8 படையினர் பலி- 24 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008

வவுனியா பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 8 படையினர் பலியானதுடன் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

பாலமோட்டையில் உள்ள விடுதலைப் புலிகளின் முன்னரங்கக் காவல்நிலைகளை இலக்கு வைத்து இன்று வியாழக்கிழமை காலை 8:30 மணியளவில் இலங்கைப் படையினர் ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைகளின் செறிவான பின்தளச் சூட்டாதரவுடன் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டனர்.

இம் முன்னேற்றத்திற்கு  எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத் தாக்குதலை தொடக்கினர்.
சில மணி நேரங்களில் படையினரின் முன்னேற்றம் முறியடிக்கப்பட்டு அவர்கள் விரட்டியடிக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்ற படையினர் மீண்டும் முன்னேற்ற முயற்சியினை மேற்கொண்டனர். இவ்வாறு படையினர் முன்நோக்கிச் செல்வதும்  அதனை விடுதலைப் புலிகள் முறியடிப்பதும், படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்குப் பின்வாங்கிச் செல்வதுமாக களநிலைமைகள் தொடர்ந்தன.

பிற்பகல் 3:30 மணி வரைக்கும் படையினரின் முன்னேற்ற முயற்சிகள் தொடர்ந்தன.

இதில் 8 படையினர் பலியாகினர். 24-க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்தனர்.

இழப்புக்களுடன் படையினர் காயமடைந்த மற்றும் பலியாகின தமது சகாக்களினது உடலங்களையும்  தூக்கிக்கொண்டு பழைய நிலைகளுக்குப் பின்வாங்கிச் சென்றனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..