பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in Danish
News in English
viiravanakkam-nerudal-small2

இலங்கைக் கடற்படையினரிடம் இருந்து தமிழக மீனவர்களைக் காப்பாற்ற வேண்டும் எனக் கோரிக்கை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008

தமிழ்நாட்டின் மீனவர்களை இலங்கை கடற்படையிடம் இருந்து இந்தியக் கடற்படை பாதுகாக்காவிட்டால் அதற்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் த. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதற்கு எதிராக இந்திய மீனவர்கள் ஆயுதங்களை ஏந்துவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

இந்திய அரசாங்கம் தமிழ்நாட்டு மீனவர்களின் பாதுகாப்பிற்காக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை. அத்துடன் அவர்களுக்கான நலன்புரித் திட்டங்களையும் தமிழக அரசாங்கம் புறக்கணித்து வருவதாகப் பாண்டியன் குற்றஞ் சுமத்தியுள்ளார்.

எனவே இதற்கு எதிராக தீவிரப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக அவர் நேற்று இராமநாதபுரத்தில் பங்கேற்ற கூட்டம் ஒன்றின் போது தெரிவித்தார்.

இதேவேளை இந்திய மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டுமாயின் இலங்கையிடம் இருந்து கச்சதீவை இந்திய அரசாங்கம் மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் எனப் பாரதீய ஜனதாக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜீ. கே. மணி கோரிக்கை விடுத்துள்ளார். பாரதீய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி அமைக்குமாக இருந்தால் கச்சதீவை அது மீட்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..