பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow எதிரியைவிடவும் எமது தாக்குப் பிடிக்கும் திறன் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமார
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

எதிரியைவிடவும் எமது தாக்குப் பிடிக்கும் திறன் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும். - க.வே.பாலகுமார அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008
எதிரியைவிடவும் எமது தாக்குப்பிடிக்கும் திறன் அதிகரிக்கும் போதே வெற்றி நிச்சயமாகும் என விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். நேற்றுக் கிளிநொச்சியில் நடைபெற்ற 'சாளரம்' கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வில்;

கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியிலுள்ள கூட்டுறவாளர் மண்டபத்தில் தமிழர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன அதிபர் திரு.பிரதாபன் தலைமையில் சாளரம் கணனி சார் காணொளி சஞ்சிகை வெளியீடு நேற்றுக் கிளிநொச்சியில் மாலை 3.40 மணியளவில் நடைபெற்றது.

வெளியீட்டுரையை ஈழநிலா படைப்பகப் பொறுப்பாளர் நகுலன் நிகழ்த்தினார். தமிழீழ வைப்பகத்தின் மேலாண்மைப் பணிப்பாளர் திரு.வீரத்தேவன் சிறப்புரையாற்றினார். மதிப்பீட்டுரையை விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் நிகழ்த்தினார்.

எதிரி எவ்வளவு தூரம் தாக்குப் பிடிப்பானோ அதைவிட கூடியநேரம் தாக்குப்பிடிப்பதற்கூடாக நாங்கள் வெல்லமுடியும். இந்த நெருக்கடி நிறைந்த உலகிலேயும் இந்தக் கணனி அறிவை மிகப் பக்குவமாக நேர்சீராகவும் நாங்கள் பயன்படுத்துவது என்பது மிக முக்கியமான செய்தி. என அவர் மேலும் தெரிவித்தார்.

தொடர்ந்து சாரளம் கணனி சார் காணொளி சஞ்சிகையை தமிழீழத் தேசிய தொலைக்காட்சிப் பொறுப்பாளர் துளசிச்செல்வன் வெளியிட்டுவைக்கத்  தமிழீழ கல்விக் கழக துணைப்பொறுப்பாளர் புலிமறவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து சாரளம் சஞ்சிகை உருவாக்கத்தில் பங்குபற்றியவர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

வன்னிப்பெருநிலப்பரப்பில் மாணவர்களது மக்களினதும் கணனி சார் அறிவை மேம்படுத்தும் நோக்கில் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் சாரளம் நிகழ்ச்சியை கணனி சார் காணொளி சஞ்சிகையாக வெளியிடப்பட்டுள்ளது.

தமிழர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தினால் தமிழீழ வைப்பகத்தின் நிதியுதவியுடன் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியின் வெளியீடாகச் சாரளம் சஞ்சிகை வெளிவந்துள்ளது. இதுவன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்முதலாக வெளிவரும் கணனி சார் காணொளி சஞ்சிகை என்பதும் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியினால் வெளியிடப்படும் முதலாவது சஞ்சிகை என்பதும் குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..