பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக வவுனியாவில் சரத் பொன்சேகா
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தடவையாக வவுனியாவில் சரத் பொன்சேகா அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 26 June 2008

வன்னிக் களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார்.

வவுனியாவுக்குச் சிறப்புப் பயணத்தினை மேற்கொண்டிருந்தபோதே காயமடைந்த படையினரைப் பார்வையிடுவதற்காக அவர் வவுனியா மருத்துவமனைக்குச் சென்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்த படையினரைப் பார்வையிட்ட அவர், மருத்துவ அதிகாரிகளுடனும் பேச்சு நடத்தியுள்ளார்.

வவுனியா மருத்துவமனைக்கான பயணத்தினை முடித்துக்கொண்டு வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குச் சென்ற அவர் அங்கு வன்னி மாவட்ட இராணுவத் தளபதி மற்றும் வன்னிக் களமுனைத் தளபதிகளுடன் பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய்ந்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறை ஆலோசனைகளையும் சரத் பொன்சேகா இச்சந்திப்பில் வழங்கியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்திப்பின் போது களமுனைகளில் உள்ள நிலவரம் குறித்து களமுனைத் தளபதிகள் சரத் பொன்சேகாவுக்கு விளக்கியுள்ளனர் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த ஒரு வாரத்திற்குள் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்கு சரத் பொன்சேகா மேற்கொண்ட இரண்டாவது பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..