|
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன |
|
|
|
Thursday, 26 June 2008 |
|
சிறிலங்காவின் புதிய காவல்துறை மா அதிபராக ஜயந்த விக்கிரமரட்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் மாதம் 2 ஆம் நாள் முதல் இவர் பதவியேற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையின் அதிகாரபூர்வ பேச்சாளராக கடமையாற்றிய வந்த இவர், சிறிலங்கா காவல்துறையில் நீண்டகால அனுபவத்தைக் கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை பதவி விலகிச் செல்லும் தற்போதைய காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா நேற்று வியாழக்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இச்சந்திப்பின் போது காவல்துறையில் மேற்கொள்ளப்படவிருக்கும் மாற்றங்கள் குறித்து ஆராயப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|