|
சார்க் மாநாட்டின்போது கொழும்பு கடற்பரப்பில் 3 இந்திய யுத்தகப்பல் |
|
|
|
Sunday, 29 June 2008 |
|
சார்க் உச்சி மாநாட்டின் பொழுது, கொழும்பு கடற்பரப்பில் மூன்று யுத்த கப்பல்களை நிறுத்தி வைப்பதற்கு, இந்தியா திட்டமிட்டுள்ளது.
வரும் ஓகஸ்ட் மாதம், கொழும்பில் சார்க் உச்சி மாநாடு இடம்பெறும் வேளையில், கட்டுநாயக்கா பன்னாட்டு விமானம் நிலையம் தாக்குதலுக்கு உள்ளாகும் பட்சத்தில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் உட்பட பாரதத்தின் இராசதந்திரிகளை, பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே, கொழும்பு கடலில் மூன்று யுத்த கப்பல்கள் நிறுத்தி வைக்கப்படும் என்று, இந்திய தூதரக வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன், மூன்று யுத்தக் கப்பல்களின் வானூர்தி இறங்கு தளங்களில், தாக்குதல் உலங்குவானூர்திகள் தரித்து நிற்கும் என்றும், இந்திய தூதரக வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டுள்ளன.
நெருடல் இணையம்
|