பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கொழும்புக்கு வரவேண்டாமென்று தமிழர்களைத் தான் கோரியமை நியாயமே என்கிறார் மனோகணேசன் - வெள்ளவத்தைக் கைது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கொழும்புக்கு வரவேண்டாமென்று தமிழர்களைத் தான் கோரியமை நியாயமே என்கிறார் மனோகணேசன் - வெள்ளவத்தைக் கைது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 29 June 2008

"வடக்கு கிழக்கு மக்கள் கொழும்புக்கு வருவதைத் தற்காலிகமாகத் தவிர்க்க வேண்டும்' என்று நான் முன்னர் கூறிய கூற்றின் நியாயத்தைக் கடந்த சனிக்கிழமை வெள்ளவத்தையில் கண்மூடித்தனமாகப் பலர் கைது செய்யப்பட்டமையும் , தலைநகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் வகை, தொகையின்றி இடம்பெறும் ஆட்கடத்தல்களும் வெளிப்படுத்தி நிற்கின்றன.

இவ்வாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் நேற்றுமுன்தினம் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு, பஸ்களில் ஏற்றிச் செல்லப்பட்டமை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே மனோகணேசன் இவ்வாறு தெரிவித்தார்.

"பாதுகாப்பு நடவடிக்கை' என்ற பெயரில் இராணுவத்தினரும், பொலிஸாரும் தமிழ் மக்களை வகை தொகையின்றிக் கைது செய்கின்றனர். இதே பெயரில்தான் சனியன்றும் வெள்ளவத்தையில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

நான் அண்மையில் "வடக்கு கிழக்கு மக்கள் தற்காலிகமாகக் கொழும்பு நகருக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்' என்ற சாரப்பட வெளியிட்ட அறிக்கையை விமர்சித்து ஜனாதிபதிச் செயலகம் பிறிதொரு அறிக்கையை விடுத்திருந்தது.

இப்போது நான் சொல்லிய கூற்று எவ்வளவு தூரம் சரியானது என்பதைச் சனியன்று நடந்த கண்மூடித்தனமான கைதுகள் நிரூபிக்கின்றன. கடத்தல்களும் தற்போது அதிகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. எத்தனையோ தமிழர்கள் கடத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் மீண்டவர்கள் எத்தனை, மாண்டவர்கள் எத்தனை என்று அரசு தான் பொறுப்புக்கூறவேண்டும். இந்த மோசடி வேலைகளில் ஈடுபடுபவர்களும் அவர்களே.

இந்தச் செயல்களை நோக்கும்போது தந்தை செல்வா கூறியமை போல ""ஈழத் தமிழர்களைக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்'' என்ற வாசகத்தின் யதார்த்தம் புரிகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையிலும், மேலக மக்கள் முன்னணியின் தலைவர் என்ற முறையிலும், மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் என்ற ரீதியிலும் நான், என்னால் இயலுமான அனைத்தையும் கடத்தல் மற்றும் கைதுகளுக்கு எதிராகவும் அரசின் அராஜகங்களுக்கு எதிராகவும் தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் வெளிப்படுத்த, அம்பலப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.

வெள்ளவத்தையில் சனியன்று இடம்பெற்ற கைதுகள் தொடர்பாக இதுவரை நாடாளுமன்றில் அவசரகாலச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிப்போரே பொறுப்புக் கூறவேண்டும் என்றார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..