|
இலங்கை அரசாங்கம் தமிழர் படுகொலைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் - ஜோன் மேர்பி அவுஸ்திரேலிய பா.உ |
|
|
|
Wednesday, 02 July 2008 |
|
இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தமிழர் படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பி பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையின் இனப்பிரச்சினைக்குச் சமாதான முறையில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் காத்திரமான முனைப்புக் காட்ட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கோரிக்கை தொடர்பான மஜகர் ஒன்றில் 4000 அவுஸ்திரேலியர்கள் கைச்சாத்திட்டுள்ளதுடன், குறித்த மகஜர் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
2002ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை மீண்டும் அமுல்படுத்தப்படுவதன் மூலம் தேவையற்ற இழப்புக்களைத் தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் காரணமாக லட்சக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இடம்பெயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியமர்த்தப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ் மக்களது சுயநிர்ணய உரிமைகளையும் சமவுரிமையையும் பேணிப் பாதுகாக்கக்கூடிய ஓர் தீர்வுத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என அவுஸ்திரேலியப் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் மேர்பி குறிப்பிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|