பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிகழ்ந்துவரும் பொங்குதமிழ் நிகழ்விற்கு தேசியத்தலைவர் பாராட்டு.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நிகழ்ந்துவரும் பொங்குதமிழ் நிகழ்விற்கு தேசியத்தலைவர் பாராட்டு. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Friday, 11 July 2008

புலம்பெயர் தமிழ் மக்கள், தாயக விடுதலையை பலப்படுத்துவதற்காக பெரும் எழுச்சிகொண்டு நிகழ்த்தி வருகின்ற பொங்கு தமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

[3 ஆம் இணைப்பு: பின்லாந்து, சுவிஸ் ஆகிய நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.]

புலம்பெயர் தமிழ் மக்களின் பொங்கு தமிழ் எழுச்சி குறித்து கருத்து தெரிவிக்கும் போது தேசியத் தலைவரின் வாழ்த்துக்களை குறிப்பிட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் தீவிரப்படுத்தி வருகின்ற அதேவேளை பெரும் பொய்களை உலகளவில் பரப்புரை செய்து வருகின்றது.

தமிழ் மக்களை கொன்றொழித்துக்கொண்டு உலகையும் ஏமாற்றி வருகின்ற சிறிலங்கா அரசு, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாக உலகளவில் சித்தரித்து வருகின்றது.

சிறிலங்காவின் இந்தப் பொய்ப் பரப்புரையை தகர்த்து எறிந்து உலகம் முழுமைக்கும் தமிழ்மக்கள் பொங்கு தமிழாக தமது அரசியல் அபிலாசைகளை பேரெழுச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

இது விடுதலைப் போராட்டத்தை வலுப்படுத்தி வருகின்ற அதேவேளை களத்தில் போராடும் போராளிகளுக்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகளுக்கு அவர்களின் விருப்ப மொழியில் தமிழ் மக்கள் தாயக விடுதலையின் நியாயத்தையும் தாயகம், தேசியம் சுயநிர்ணய உரிமைகளுக்கு தமிழ் மக்கள் உரித்துடையவர்கள் என்பதையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

உரிமைக்கானதுதான் தமிழீழ விடுதலைப் போராட்டம் என்பதை அவர்கள் வலுவாக எடுத்துரைக்கின்றனர். அதிலும் கனடாவில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் ஒரு லட்சம் தமிழ்மக்கள் திரண்டு எழுந்திருப்பதும் பின்லாந்து- சுவிஸ்- நியூசிலாந்து- அவுஸ்திரேலியா- இத்தாலி- ஜேர்மனி- பிரான்ஸ்- நெதர்லாந்து- பெல்ஜியம்- நோர்வே- சுவீடன்- டென்மார்க்- தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இதுவரை பொங்கு தமிழாக எங்களின் புலம்பெயர் உறவுகள் தாயகத்தின் போராட்டத்தை வலுப்படுத்துவதில் பேரெழுச்சியை காட்டியுள்ளனர்.

அடுத்து லண்டனில் பொங்கு தமிழ் நடைபெறவுள்ளது. தாயக தாகத்துடன் புலம்பெயர்ந்த தளங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் இந்த எழுச்சிக்கு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள அதேவேளை பெருமிதமும் கொண்டுள்ளார் எனவும் குறிப்பிட்ட பா.நடேசன், விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் இத்தகைய செயற்பாடுகள் தொடரவேண்டும் என்றார் அவர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..