பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஒட்டுக்குழுவின் தலைவி நாளை அரச அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்கேற்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஒட்டுக்குழுவின் தலைவி நாளை அரச அனைத்துக்கட்சி மாநாட்டில் பங்கேற்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 12 July 2008

சிங்கள அரசு மேற்குலகத்தினை ஏமாற்றும் நாடகமான இனப்பிரச்சினைத்தீர்வுக்காகன அனைத்துக்கட்சி மாநாடு மீண்டும் நாளையதினம் கூடவுள்ளது.  

இதில் கிழக்கு ஒட்டுக்குழுவான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் பிரதிநிதி முதன்முறையாக பங்கேற்கவுள்ளார். மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் இந்த மாநாட்டில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் சார்பில் பங்கேற்கவுள்ளார்.

இதேவேளை அனைத்துக்கட்சி குழு, ஐக்கிய தேசியக்கட்சி, ஜே வி பி மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆகியவற்றுக்கும் மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து கட்சிக்குழு, காலநிர்ணயம் செய்து தமது கூட்டங்களை நடத்துமா என்ற கேள்வி ஒன்றுக்கு அனைத்துகட்சிக்குழுவின் தலைவர் திஸ்ஸ விதாரண, “வடஅயர்லாந்தின் தீர்வுக்காக 6 வருடங்கள் பேச்சுக்கள் நடத்தப்பட்டன. இலங்கையில் தற்போதே அனைத்துக்கட்சிக்குழு ஒரு வருடத்தை பூர்த்தி செய்துள்ளது. இந்தநிலையில், அனைத்துக்கட்சி மாநாட்டுக்காக கால வரையறையை மேற்கொள்ளமுடியாது” என அவர் பதிலளித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..