பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow சுமார் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன.
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

சுமார் மூவாயிரம் இந்திய துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன. அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 12 July 2008

எதிர்வரும் தெற்காசிய ஒத்துழைப்பு மாநாட்டுக்காக இந்தியப் பிரதம மந்திரிக்கும் அநத நாட்டின் அதிகாரிகளுக்கும்  பாதுகாப்பளிக்கும் வகையில் மூவாயிரம் இந்தியத் துருப்புக்கள் இலங்கை வரவுள்ளன

படையின் முதலாம் பிரிவில் சுமார் 1000 துருப்புக்கள்  எதிர்வரும் செவ்வாய்க்கிழமையன்று இலங்கை வரவுள்ளதாக இன்றைய லக்பிம ஆங்கில இதழ் தெரிவித்துள்ளது.

இரண்டாம் கட்டத் துருப்பினர் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளனர். இறுதிக் கட்டத் துருப்பினர் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு இந்தியப் போர்க் கப்பலின் மூலம் வரவுள்ளனர்.

இதனையடுத்து கொழும்பின் ஐந்து நட்சத்திர விருந்தகங்கள் இரண்டின் அறைகள் முழுமையாக இந்தியப் படையினருக்காக இரண்டு வாரங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இலங்கைக்கு இந்தியத் துருப்பினரை ஏற்றி வரும் கப்பல் இந்தியர்கள் கொழும்பில் தங்கியிருக்கும் வரை கொழும்புத் துறைமுகத்தில் தரித்திருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குண்டு துளைக்காத வாகனங்கள் மற்றும் உலங்குவானூர்திகளும் இந்தியர்களுக்காக இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கிடையில் சார்க் மாநாட்டில் பங்கேற்கும் பாகிஸ்தானியப் பிரதமருக்குப் பாதுகாப்புக்காக அந்த நாட்டின் சுமார் 500 படையினர் வரை இலங்கைக்கு வரவுள்ளனர்.

அதேநேரம் ஆப்கானிஸ்தானியத் தலைவருக்காக சுமார் 100 ஆப்கானிஸ்தானியப் படையினர் வருகை தரவுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..