|
சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளின் வரிசையில் ஈரான் முதலிடம் |
|
|
|
Monday, 14 July 2008 |
|
சிறீலங்காவிற்கு நன்கொடையாகவும் சிறிய வட்டி வீதத்தில் கடனாகவும் வழங்கும் நாடுகளின் வரிசையில் ஈரான் ஜப்பானையும் முந்திக்கொண்டு முதன்மை பங்கு வகித்துள்ளது.
முன்னய வருடங்களில் சிறீலங்காவிற்கு உதவி வழங்கும் நாடுகளில் ஜப்பானே மிகப்பெரிய அளவில் உதவி வழங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் தற்பொழுது இவ்வருடத்தின் மே வரையான காலப்பகுதியில் 1.05 பில்லியன் டொலர் உதவித்தொகையை சீறலங்காவிற்கு வழங்கியதன் மூலம் ஈரான் அந்த இடத்திற்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ் உதவித்தொகையில் 959 மில்லியன் உதவித்தொகைப் பணம் அபிவிருத்தி திட்டங்களுக்கான கடன்உதவியாகவும் 90 மில்லியன் நன்கொடையாகவும் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த நவம்பர் 2007 காலப்பகுதியில் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈரானிற்கு சென்ற போது எட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தார்.
சிறீலங்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் மசகு எண்ணெயில் எழுபது வீதமானவை ஈரானில் இருந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
நெருடல் இணையம்
|