பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இலங்கையில் அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: அமெரிக்க கங்கிரஸ் சபை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கையில் அனைத்துலக கண்காணிப்புக் குழு அமைக்கப்பட வேண்டும்: அமெரிக்க கங்கிரஸ் சபை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு அனைத்துலக கண்காணிப்பாளர் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க அரசாங்கமும், அனைத்துலக சமூகமும் அதரிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் சபை தனது தீர்மானத்தில் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் சபையைச் சேர்ந்த கலிபோர்னியா பிரிதிநிதி பிராட் சேர்மன், நியூஜேர்சி உறுப்பினர் பிராங் பலோன் ஆகியோரினால் பரிந்துரை செய்யப்பட்ட 1,338 ஆவது சரத்தில் சிறிலங்கா அரசு, துணை இராணுவக்குழு, அமெரிக்க அரசு, விடுதலைப் புலிகள் ஆகியோருக்கான செய்தி உள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அரசுடன் இணைந்து செயற்பட்டுவரும் துணை இராணுவக்குழுவான பிள்ளையான் குழு மிகவும் அதிகமான மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வருகின்றது.

மோதல்களில் ஈடுபட்டுவரும் எல்லாத்தரப்பினரும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

நீதிக்குபுறம்பான படுகொலைகள், பொதுமக்களின் வாழ்விடங்கள் மீதான எறிகணை வீச்சுக்கள் மற்றும் குண்டு வீச்சுக்கள், மனிதாபிமான பணிகள் மீதான தடைகள், இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்டங்கள் மீதான தடைகள் என்பன இலங்கையில் அதிகரித்துள்ளன.

விடுதலைப் புலிகளும், துணை இராணுவக்குழுவினரும் சிறார் படைச்சேர்ப்பை நிறுத்த வேண்டும். சிறிலங்கா அரசு போரை நிறுத்த வேண்டும். இராணுவத் தீர்வை விடுத்து அரசியல் தீர்வை மேற்கொள்வதுடன், வடபகுதிக்கு உதவிப் பொருட்கள் செல்வதற்கு அரசு அனுமதிகள் வழங்கப்படவும் வேண்டும்.

காணாமல் போனோர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மனிதாபிமானப் பணியாளர்கள் மீதான தாக்குதல்களை மேற்கொள்வோர் மீதான விசாரணைகளை சிறிலங்கா அரசு மேற்கொள்ள வேண்டும்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளையும், இடம்பெயர்ந்த மக்களுக்கான பாதுகாப்பான வாழ்கையையும் அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

25 வருட காலப்போரில் 75,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தமிழ் மக்கள். 1.5 மில்லியன் மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர். மோதல்களினால் அவர்கள் பலவந்தமாக இடம்பெயர்ந்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 2002 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட போர் நிறுத்த உடன்பாடு முறிவடைந்ததைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், 200,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.

பேச்சுக்களை மீள ஆரம்பிப்பதை புறம்தள்ளியுள்ள அரசு, இராணுவத்தீர்வை முதன்மைப்படுத்தி வருகின்றது. அரசின் இந்த அணுகுமுறை காணாமல் போவோரின் தொகையை அதிகரித்து வருகின்றது. மனிதாபிமானப் பணியாளர்களின் செய்றபாட்டையும் இது மட்டுப்படுத்தி வருகின்றது.

எனவே, இலங்கையில் அனைத்துலக கண்காணிப்பாளர்கள் குழு அமைக்கப்படுவதை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற அழுத்தத்தை அமெரிக்க அதிபர் ஜோர்ச் புஷ் வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..