|
ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு வரத் தயாரில்லை என்கிறார் --இளந்திரையன் |
|
|
|
Tuesday, 15 July 2008 |
ஆயுதங்களைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை தமது அமைப்பு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனத் தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.
|
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, இந்தியாவில் வெளியிட்டிருந்த கருத்துக் குறித்துக் கேட்டபோதே இளந்திரையன் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர் இது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
இலங்கை அரசாங்கமே, 6 வருட போர் நிறுத்தத்தில் இருந்து தன்னிச்சையாக விலகிக் கொண்டது.
இந்தநிலையில் போர் நிறுத்தம் ஒன்றின் நிமித்தம் தாம் ஆயுதங்களை கைவிடமுடியாது என இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்த ராஜபக்சவின் இராணுவ முனைப்புகள் தமது போராளிகளால் வெற்றி கொள்ளப்படும் என்றும் இளந்திரையன் குறிப்பிட்டுள்ளார்.
நெருடல் இணையம்
|