பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவ தென்னாபிரிக்கா தயார்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இலங்கை இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவ தென்னாபிரிக்கா தயார் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

இந்தியாவின் பின்புலத்துடன் இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு உதவியளிக்கத் தயார் என தென்னாபிரிக்கா அறிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் சர்வதேச சமாதான நடவடிக்கையாளரும், பிரதி அமைச்சருமான ராதாகிருஸ்ண  படையாச்சி இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்த அமைச்சர் பி சந்திரசேகரனிடம் இந்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக அரசாங்கமும் தமிழீழ விடுதலைப் புலிகளும் சாதகமான நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும் என படையாச்சி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்தியா பல தடவைகளாக இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வில் தலையிட்டது. எனினும் இன்று கபடமான முறையற்ற பார்வையாளர்களின் கைகளுக்குள் வந்துள்ளது.  இந்தநிலையில் இந்தியா, குறித்த முறையற்றவர்களுடன் சேர்ந்து விடாது, தீர்க்கமான முறையில் இலங்கையின் இனப் பிரச்சினைத் தீர்வுக்கு வித்திடவேண்டும் எனப் படையாட்சி கோரியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..