|
தமிழக மீனவர்களைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம் நேரில் கோரிக்கை |
|
|
|
Tuesday, 15 July 2008 |
|
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல்களுக்கு உள்ளாவதை நிறுத்த உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என் வரதராஜன் தமிழக முதல்வர் கருணாநிதியை நேரடியாகச் சந்தித்து வலியுத்தியுள்ளார்.
வரதராஜன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் நேற்றுத் தமிழக முதல்வரை அவரது வீட்டில் சந்தித்துப் பேசியிருக்கின்றனர்.இதன் போதே இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டிருக்கிறது.
இலங்கைக் கடற்பரப்பில் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் இந்தச் சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தமிழக முதல்வரை வலியுறுத்தியுள்ளனர்.
நெருடல் இணையம்
|