பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

பாலமோட்டையில் முன்நகர்வு முறியடிப்பு: 10 படையினர் பலி- 19 பேர் காயம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

பாலமோட்டைப்பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:30 மணியளவில் சிறிலங்காப் படையினர் செறிவான எறிகணை மற்றும் வெடிகணைச்சூட்டாதரவுடன் பெருமெடுப்பிலான முன்நகர்வை மேற்கொண்டனர்.

முன்நகர்வினை மேற்கொண்ட படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர முறியடிப்புத்தாக்குதலை நேற்று இரவு 7:00 மணிவரை நடத்தினர்.

இத்தாக்குதலையடுத்து படையினர் இழப்புக்களுடன் தமது நிலைகளுக்கு பின்வாங்கினர்.

முறியடிப்புத் தாக்குதலில் 10 படையினர் கொல்லப்பட்டனர். 19 பேர் காயமடைந்தனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..