பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கருணாவுடன் மீண்டும் இணைந்த வெள்ளைவான் சூத்திரதாரி சுமன் !
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கருணாவுடன் மீண்டும் இணைந்த வெள்ளைவான் சூத்திரதாரி சுமன் ! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 15 July 2008

மட்டக்களப்பு மாவட்டத்தில் கருணாவுடனான பிளவு ஏற்படுவதற்கு முன்னர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் நிதிப்பிரிவில்; இயங்கி வந்த கலை என்பவர். கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற காலப்பகுதிகளில் அவருடன் இணைந்து சுமன் என்ற பெயரில் செயற்பட்டு வந்திருக்கிறார்.

எனினும் நிதி மோசடி மற்றும் பெண்கள் தொடர்பு போன்ற பிரச்சனைகள் காரணமாக பிள்ளையானால் கடந்த 2மாதங்களுக்கு முன்னர் இவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கையும் செய்யப்பட்டிருந்தார்.

அதனைத் தொடர்ந்து வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்த இவர் கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னரே கொழும்பு திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு திரும்பியதும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் தொடர்புகளை ஏற்படுத்தி வந்திருக்கின்றார். இது இவ்வாறிருக்க அண்மையில் நாடு திரும்பிய கருணாவுடனும் மீண்டும் தொடர்புகளை ஏற்படுத்தி இரகசியமான சந்திப்பொன்றையும் மேற்கொண்டிருக்கிறார்.           இதன் போது கருணாவின் உத்தரவுக்கமைய அவரின் நேரடி கண்காணிப்பின் கிழ் கடந்த சில நாட்களாக கொழும்பின் பல பகுதிகளில் உள்ள வர்த்தகர்களிடம் பணம் பெறும் நோக்கில் வெள்ளைவான் கடத்தல்களில் ஈடுபட்டு வருவதாக புலனாய்வுத் தகவல் ஒன்று தெரிவிக்கின்றது.  இராணுவ புலனாய்வு முக்கியஸ்தர் ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ள இவர் வெள்ளவத்தை மற்றும் தெகிவளைப் பகுதிகளிலுள்ள தமிழ் இளைஞர்களின் விபரங்களைத் திரட்டிவருவதுடன் வெள்ளைவான் மூலமாக கடத்தல் வேலைகளைச் செய்து வருவது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் மட்டக்களப்புக்கு இராணுவ புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த முக்கியஸ்தர் ஒருவருடன் பஜீரோ வாகனமொன்றில் இவர் வந்து சென்றதாகவும் பிறிதொரு தகவல் தெரிவிக்கின்றது.


மீனகன்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..