பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கடத்தலில் ஈடுபட்ட வெள்ளை வான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கடத்தலில் ஈடுபட்ட வெள்ளை வான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 21 July 2008

இலங்கைத் தமிழர்களை அண்மைக்காலமாக உலுக்கி வந்த கடத்தல் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

அண்மையில் செங்கலடியில் சடலமாக மீட்கப்பட்ட தேவதாஸ் சுரேஸ்குமாரின் கடத்தல் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே இந்தத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த மாதம் 19ம் திகதி கடத்தப்பட்ட சுரேஸ்குமாரின் உடல் அண்மையில் செங்கலடி ஈ.பி.டி.பி காரியாலய வளவில் சடலமாக மீட்கப்பட்டது.
 
குறித்த நபரைக் கடத்திச் செல்வதற்குப் பயன்டுத்திய வெள்ளை வான் செங்கலடிப் பிரதேச ஈ.பி.டி.பி. காரியாலயப் பொறுப்பாளர் ரவி என்பவரது மனைவியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
கடத்தல் சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட 56-5659 என்ற இலக்கமுடைய வெள்ளை வானைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
 
மேலும், கப்பம் கொடுக்க மறுப்புத் தெரிவித்த ஒருவரது மோட்டார் சைக்கிள் ஒன்றும் ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
சுரேஸ்குமார் படுகொலை விவகாரம் தொடர்பாக 9 சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட தீவிர விசாரணைகளிலிருந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் 20ம் திகதி வரை சுமார் 180 பேர் வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டுள்ளதாகப் பிரதி அமைச்சர் இராதாகிருஸ்ணன் தகவல் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதேவேளை, வெள்ளை வான் விவகாரம் பற்றித் தாம் இதுவரையில் அறியவில்லை எனவும், அவ்வாறான தகவல்கள் இருந்தால் தமக்கு அறிவிக்குமாறும் புதிய காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன அண்மையில் ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..