|
சிறீலங்கா பாதுகாப்பு செயலர் யுத்தநிறுத்தத்தை நிராகரித்துள்ளார் |
|
|
|
Monday, 21 July 2008 |
|
சிறீலங்கா அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்தத்திற்கு உடன்படபோவதில்லை என சிறீலங்கா ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் செவ்வாய்கிழமை காலை மும்மொழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
விடுதலைப்புலிகள் யுத்தகளமுனைகளில் பலவீனமான நிலையில் ஏனமனதாக யுத்தநிறுத்தத்திற்கு அறிவித்துள்ளதாகவும் சிறீலங்கா அரசாங்கத்திற்கு விடுதலைப்புலிகளுடன் யுத்தநிறுத்;தத்திற்கு செல்லவேண்டிய தேவை இல்லை எனவும் கோத்தபாய அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.
அவர்மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகள் முதலில் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்தால் மாத்திரமே அவர்களை நம்பலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்க சமாதான செயலர் டொக்ரர் ரஜீவ விஜயசிங்க கருத்து தெரிவிக்கையில் இவ்அறிவிப்பு நோர்வே ஊடாக வரவேண்டும் எனவும் எமக்கு சமாதானம் வேண்டும் எனவும் அவர்கள் உண்மையில் அவ்வாறு யுத்தநிறுத்தத்திற்கு வருவதாக இருந்தால் நேரடியாக தம்பிடமோ அல்லது நோர்வே சமாதானதூதுவர்கள் ஊடாகவோ தெரிவித்திருப்பார்கள் எனவும் எனினும் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார்.
நெருடல் இணையம்
|