|
“நாம் திருப்பிச்செல்ல விடுதலைப்புலிகள் வழிசமைப்பார்கள்” -இடம்பெயர்ந்த மக்கள் நம்பிக்கை! |
|
|
|
Wednesday, 23 July 2008 |
|
மல்லாவி துணுக்காய் பகுதிகளிலுள்ள மக்கள் தாங்கள் இடம்பெயர்ந்தமை இதுவே முதற்தடவை எனவும் தங்கள் வீடுகளிலுள்ள பொருட்கள் பெருமளவிலான........
ஆடுமாடுகள் எல்லாவற்றையும் அப்படியே விட்டுவிட்டு படையினரின் எறிகணை வீச்சுக்கிளிவிருந்து தங்கள் உயிர்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரே நோக்கத்துடன் இடம்பெயர்ந்துள்ளதாகவும் விடுதலைப்புலிகள் விரையில் படையினரை விரட்டியடித்து தங்களை தங்கள் இடங்களுக்குச்செல்ல வழிசமைப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
மல்லாவி துணுக்காய் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து மரநிழல்களிலும் வெட்டவெளிகளில் கூடாரங்களிலும் தங்கியுள்ள மக்களே இவ்வாறு தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களின் விவசாய நிலங்கள் காலநடைகள் யாவும் முற்றாக படையினரின் எறிகணை வீச்சுக்குள் அகப்பட்டுள்ளதால் தங்களது பொருளாதாரம் முற்றாகப்பாதிக்கப்பட்டுள்ளது எனவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்
நெருடல் இணையம்
|