பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow யுத்த முன்னெடுப்புக்களுக்கு மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்பு
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

யுத்த முன்னெடுப்புக்களுக்கு மீண்டும் இந்தியாவின் ஒத்துழைப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 23 July 2008

யுத்த முன்னெடுப்புக்களுக்கான இந்தியாவின் ஒத்துழைப்பு மீண்டும் உறுதி செய்யப்பட்டிருப்பதாக,  சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் நேற்று இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் அரசாங்கத்தின் பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டு , காங்கிரஸ்
கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி ஓராண்டுக்கு தக்க வைக்கப்பட்ள்ளது.

இது குறித்து இன்று நாடாளுமன்றத்தில் கருத்துரைத்திருக்கும், சிறீலங்கா சுகாதாரத்துறை அமைச்சர் நிமால் சிறீபால டீ சில்வா, நம்பிக்கை வாக்கெடுப்பில் இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சி வெற்றியீட்டியுள்ளமை, வடக்கில் தமது படைகள் முன்னெடுக்கும் படை நடவடிக்கைகளுக்கு சாதகமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார்.

இதனிடையே, தென்னிலங்கை மாவட்டங்களில் தொடருந்து அபிவிருத்திப் பணிகளை, சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுப்பதற்கு கடனுதவி வழங்குவதற்கு, இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கான உடன்படிக்கை, இன்று சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இந்திய மத்திய அரசாங்கத்திற்கும் மத்தியில் கைச்சாத்தாகியுள்ளது. இதன்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட படைத்துறை - பொருளாதார நிதியுதவிகளுக்கு மேலதிகமாக, சிறீலங்கா அரசாங்கத்திற்கு மேலும் பத்துக் கோடி டொலர் கடனுதவியை இந்தியா வழங்குகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..