|
இலங்கை கடல் எல்லையில் இரு இந்தியப் போர்க் கப்பல்கள் |
|
|
|
Monday, 28 July 2008 |
|
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் இந்திய உயர் அதிகாரிகளின் பாதுகாப்புக்கென இந்தியாவின் இரு யுத்தக் கப்பல்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பபட்டுள்ளன. ஐ.என்.ஸ். ரண்வீர் மற்றும் ஐ.என்.எஸ். மைசூர் ஆகிய இரண்டு யுத்த கப்பல்களே இலங்கைக் கடற்பரப்பின் வெளியே நிலையெடுத்து உள்ளன.
இலங்கைக் கடற்பரப்பை சிறீலங்காப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏதாவது அவசர நிலை ஏற்பட்டால் மட்டுமே மேலதிகப் பாதுகாப்புக்கு இந்திய யுத்தக் கப்பல்கள் இலங்கைக் கடற்பரப்பில் கொண்டு வரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியப் போர்க் கப்பல்கள் எதிர்வரும் ஆகஸ் 3ம் நாள் வரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம் இந்தியாவின் தென் கடற்பிரதேசம் முழுவதும் இந்தியக் கடற்படையினரால் சிறப்பு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|