|
பனாகொடை இராணுவ முகாமில் தீ விபத்து |
|
|
|
Monday, 28 July 2008 |
|
பனாகொடை இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பனாகொடை இராணுவ முகாமின் துணிகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையிலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக இராணுவ முகாம் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மின்சார ஒழுக்குக் காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தினால் இராணுவ முகாம் நடவடிக்கைகளுக்கு எவ்வித பாதிப்புக்களும் இல்லை என முகாமைச் சேர்ந்த உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இதேவேளை இத் தீ விபத்துத் தொடர்பாகத் தற்போது மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|